படங்களை வெளியிட புதிய ஓடிடி தளம்…அரசு முயற்சி !

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (23:32 IST)
கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரொனா பரவியது. இதையடுத்து  மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.

எனவே தியேட்டர், வணிக வளாகம் உள்ளிட்ட பலதுறைகள் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டன.

இந்த வருடம் தொடக்கத்தில் நிலைமை சீராக இருக்கும் என நினைத்த நிலையில் கொரொனா இரண்டாம் தொற்றால் மீண்டுன்ம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில்  புதிய சினிமாக்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாமல்  பிரபல ஒடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரள மாநில மலையாள திரைநட்சத்திரங்கள் படங்களை வெளியிடுவது தொடர்பாக  அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதுகுறித்து அம்மாநில அரசு பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது.

மேலும், இதுகுறித்து அம்மாநில அமைச்சர் சஜி செரியன் பேசும்போது, மலையாள திரைப்படங்களை வெளியிடுவதற்கென புதிய ஓடிடி தளத்தை அரசு வெளியிடும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்