24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு: வானிலை எச்சரிக்கை

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (10:13 IST)
இன்னும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
வங்க கடலில் ஏற்கனவே 3 காற்றழுத்த தாழ்வு அடுத்தடுத்து தோன்றியதன் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாகவும் இது மேலும் வலுப்பெற கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
 
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் ஆனால் அதே நேரத்தில் ஆந்திரா பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்