புதிய காற்றழுத்த தாழ்வால் தொடரும் கனமழை: பொதுமக்கள் அவதி

திங்கள், 29 நவம்பர் 2021 (07:13 IST)
தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தில் மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது
 
இந்த நவம்பர் மாதத்தில் ஏற்கனவே வங்க கடலில் மூன்று காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றியது என்பதும் இதன் காரணமாக பல பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளக்காடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளை மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்ற இருப்பதாகவும் இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நகரம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது 
 
இதன் காரணமாக டிசம்பர் 2ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்