நவம்பர் 29ஆம் தேதி வரை ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம்!

வெள்ளி, 26 நவம்பர் 2021 (10:46 IST)
இன்று முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டும் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மணி நேரத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்