நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து: உதயநிதியின் முக்கிய அறிவிப்பு..!

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (19:18 IST)
நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து குறித்து உதயநிதியின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 
 
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கடந்த அக்டோபர் 21 அன்று தொடங்கி வைத்த நீட்விலக்கு நம் இலக்கு கையெழுத்து இயக்கம் மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. 
 
‘50 நாட்கள் - 50 லட்சம் கையெழுத்துகள்’ என்ற இலக்கோடு தொடங்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கம், இன்றோடு 50 நாட்களை கடந்திருக்கிறது. 
 
இணையத்தில் 56 லட்சம் - அஞ்சல் வழியே 16 லட்சம் என 72 லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்கள் நீட் அநீதிக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்திட்டு வருகின்றனர். 
 
இந்த கையெழுத்துகளை எல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களிடம் சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞர்  மாநில மாநாட்டில் ஒப்படைக்கவுள்ளோம். 
 
இதற்காக களத்திலும் - இணையத்திலும் அயராது உழைத்து வரும் மாவட்டக் கழக செயலாளர்கள் - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள் - ஐடிவிங் நிர்வாகிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
நீட் ஒழிப்புக்கான இந்த கையெழுத்து இயக்கம் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில்  உழைத்திடுவோம் - நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்குவோம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்