ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை பார்வையிட சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை நேரில் சென்று பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விருந்தினர் மாளிகையிலே சிலரை மட்டும் சந்தித்து பேசியுள்ளார்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை பார்வையிட இன்று பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி சென்றார். அங்கு அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரவேற்றார். அவருடன் தமிழக முதல்வர், பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓகி புயலால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விளக்கம் தெரிவித்தார். இதையடுத்து ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள் பிரநிதிகளை சந்தித்தார். அவர்களை தங்களது எடுத்து கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை மோடி நேரில் சென்று பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விருந்தினர் மாளிகையில் சிலரை மட்டும் சந்தித்து முடிந்துக்கொண்டது மக்களிடையே மேலும் மத்திய அரசு மீதான கோபத்தை அதிகரித்துள்ளது.