ஓகி புயலால் நிலைகுலைந்த பகுதிகளை பார்வையிட ராகுல் காந்தி குமரிக்கு வருகை

வியாழன், 14 டிசம்பர் 2017 (09:47 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் போகும் ராகுல் காந்தி ஓகி புயலால் நிலைகுலைந்த பகுதிகளை பார்வையிட இன்று கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார்.
குமரி மாவட்டம் ஓகி புயலால் கடுமையாக சேதமடைந்தது. மீனவ மக்கள் பலர் தங்களின்  வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து கடும் துயரத்திற்கு ஆளானார்கள். ஓகி புயலிற்கு முன் கடலிற்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் ஓகி புயலில் சிக்கி பலர் மாயமானார்கள். மத்திய மாநில அரசுகள், நடவடிக்கை எடுத்து காணாமல் போன மீனவர்கள் பலரை மீட்டனர். மீதமுள்ளவர்களையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு குமரிக்கு சென்ற முதல்வர் பழனிசாமி, மீனவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசின் சார்பில் நிவாரணத் தொகையாக 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக கூறினார்.
 
இந்நிலையில் இன்று குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் ராகுல் காந்தி ஓகி புயலால் பாதிப்படைந்த பகுதிகளை நேரில் பார்வையிட இருக்கிறார். மேலும் ‘ஒகி’ புயலால் இறந்த மீனவர்களின் குடும்பத்தினரையும், கடலில் மாயமான மீனவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறவிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்