2 சிறுமிகளை 6 மாதங்களாக வன்கொடுமை செய்து கொடூரம்! – நாமக்கலில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (14:44 IST)
நாமக்கல் அருகே இரண்டு சிறுமிகளை கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நாமக்கல் அருகே சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரத்தை சேர்ந்த 12 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகளை 75 வயது முதியவர் உட்பட 6 பேர் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. அதை தொடர்ந்து முதியவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்