நாகூர் ஹனிபா நூற்றாண்டு! தெரு, பூங்காவுக்கு பெயர் சூட்டி தமிழக அரசு அறிவிப்பு!

Prasanth Karthick
புதன், 18 டிசம்பர் 2024 (10:54 IST)

இஸ்லாமிய பக்தி பாடகரும், திமுகவின் முக்கிய நபருமான மறைந்த நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

 

நாகப்பட்டிணம் அருகே உள்ள நாகூரை சேர்ந்தவரான இஸ்மாயில் முகமது ஹனிபா திமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர். மட்டுமல்லாமல், இஸ்லாமிய பக்தி பாடல்கள் பலவும், திமுகவிற்காக கொள்கை பாடல்கள் பலவும் பாடியுள்ளார். 

 

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதியின் இளம் வயது தோழனுமான நாகூர் ஹனிபா, அவரது பாடல்களுக்காக ‘இசை முரசு’ என்ற பெயரை பெற்றவர். 1957 முதல் 10 ஆண்டுகளாக தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தவர்.

 

அவரது நூற்றாண்டு தொடக்கத்தை சிறப்பிக்கும் விதமாக நாகப்பட்டிணத்தில் அமைந்துள்ள தைக்கால் தெரு மற்றும் புதிதாக அமைய உள்ள பூங்காவிற்கு ’இசை முரசு’ நாகூர் ஹனிபா பெயர் சூட்டப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்