நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: இன்று நடக்கவிருந்த தொடக்க விழா திடீர் ஒத்திவைப்பு..!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (07:10 IST)
இன்று நடைபெற இருந்த நாகை - இலங்கை பயணிகள் கப்பல் தொடக்க விழா திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

 நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து தொடக்க விழா அக்டோபர் 10ஆம் தேதி அதாவது இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தொடக்க விழா அக்டோபர் 12ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க இருப்பதால் தொடக்க விழா மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு  40 ஆண்டுகள் கழித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய பயணிகள் கப்பல் சேவை தொடங்குகிறது.   இன்று நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகப்பட்டினத்துக்கும் வரும் 12ஆம் தேதி தனது முதல் பயணத்தை தொடங்குகிறது.

இந்த கப்பலில் பயணிக்க பாஸ்போர்ட் இ-விசா கட்டாயம். இதில் பயணிக்கும் பயணிகள் தங்களுடன் அதிகபட்சம் 50 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம். இந்த கப்பலில் பயணம் செய்ய ரூ.7500 கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்