கண்களை குளமாக்கும் விவசாயிகளின் தற்கொலை... தண்ணீர் இல்லாததால் தவிப்பு

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2016 (19:36 IST)
நாகை கீழையூரில் பயிர் கருகியதை கண்டு விவசாயி மாரிமுத்து உயிரிழந்தார். நேற்று உயிரிழந்த நண்பர் ராஜ்குமாரின் இறுதிசடங்கில் பங்கேற்று திரும்பியாவர் இன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


 
நாகை மாவட்டத்தில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதை கண்டு அதிர்ச்சியடைந்து தற்கொலை கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
ஊருக்கே சோறு போடும், விவசாயி தனக்கே சோறு இல்லாமல் உயிர் இழப்பது மனித நேயம் கொண்ட ஒவ்வொருவரையும் மனம் நொந்து கண் கலங்க செய்கிறது. நேற்று கீழையூர் விவசாயி ராஜ்குமார், இன்று  விவசாயி மாரிமுத்து என்று விவசாயிகள் தற்கொலை நீண்ட கொண்டே போய்கிறது. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் பலர் இன்று கடன்களில் தத்தெடுப்பதும், வேறு தொழிலை நாடி செல்லும் செய்தியாக தினந்தோறும் வெளிவருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் விவசாயம் அழிவது மட்டுமின்றி விவசாயிகளும் அழிந்து வருவது நாளைய தலைமுறைக்கு எச்சரிக்கை மணியை அடிக்கிறது என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
 
விவசாயிகளை காப்பாற்ற உரிய காலத்தில் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று நாகை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
அடுத்த கட்டுரையில்