எனக்கே எனக்கு என்று முந்தாதிருந்தால் நாளை நமதே: கமல் வெளியிட்ட ஆடியோ

Webdunia
வியாழன், 25 ஜனவரி 2018 (22:45 IST)
நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே தீவிர அரசியலில் இறங்கி தமிழகத்தை கலக்கி கொண்டிருக்கும் நிலையில் இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 'நாளை நமதே' என்ற அந்த ஆடியோவில் அவர் கூறியிருப்பதாவது

நேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால் நாளை நமதே.
பார்த்ததைப் பயின்றதைப் பழகி நடந்தால் நாளை நமதே
நிலமும் நீரும் பொதுவெனப் புரிந்தால் நாளை நமதே
எனக்கே எனக்கு என்று முந்தாதிருந்தால் நாளை நமதே
மூத்தோர் கடனை இளையோர் செய்தால் நாளை நமதே
அனைவரும் கூடி தேரை இழுத்தால் நாளை நமதே
சலியா மனதுடன் உழைத்து வாழ்ந்தால் நாளை நமதே
முனைபவர் கூட்டம் பெருகிவிட்டால் நாளை என்பது நமதே, நமதே
கிராமியமே நமது தேசியம் என்றால் நாளை நமதே, நிச்சயம் நமதே
தமிழர், தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே, நிச்சயம் நமதே..

வரும் பிப்ரவரி 21ஆம் தேதி இராமநாதபுரத்தில் இருந்து தொடங்கவுள்ள தனது அரசியல் பயணத்திற்கு 'நாளை நமதே' என்ற பெயரை கமல் வைத்திருந்த நிலையில் அதே பெயரில் ஒரு புரட்சி கவிதையை வெளியிட்டு பரபரப்பை ஏ'ற்படுத்தியுள்ளார் கமல்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்