நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும், அன்றே தனது கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து கருத்துக்கள் பதிவாகி கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் உதயகுமார், கமல்ஹாசனை ஒரு குழப்பவாதி என்று விமர்சனம் செய்துள்ளார். அப்துல்கலாம் அவர்கள் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் அரசுக்கும் மக்களுக்கும் சொந்தமானவர். அவர் எந்த மதத்தினர்களையும் எதிர்த்தவர் அல்ல
ஆனால் கமல்ஹாசன், மக்களுக்கும் அரசுக்கும் சொந்தமான, ஒரு அரசியல்வாதி அல்லாத அப்துல்கலாம் அவர்களது இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்குவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மேலும் கமலின் கட்சி மாநில கட்சியா? திராவிட கட்சியா? தேசிய கட்சியா? அவருடைய கட்சியின் கொள்கைகள் என்ன? என்பது குறித்து எதையும் அறிவிக்காமல் இருப்பது அவர் ஒரு குழப்பவாதி என்பது உறுதியாகிறது' என்று உதயகுமார் கூறியுள்ளார்.