யார் ஆம்லேட் சாப்பிடுவது என்பதில் தகராறு.. மைத்துனரை அடித்தே கொன்ற மாமன்..!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (13:56 IST)
ஆர்டர் செய்த ஆம்லேட்டை யார் சாப்பிடுவது என்று மாமன் மற்றும் மைத்துனன் இடையே நடந்த சண்டை ஒரு கொலையில் முடிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கல்பாக்கம் அருகே செல்லப்பன் என்பவரும் முருகன் என்பவரும் மாமன் மைத்துனவர்களாக இருந்தனர். இருவரும் அந்த பகுதியில் உள்ள மது அருந்தும் கடைக்கு சென்று மது அருந்தினார். 
 
மது அருந்தியபோது சைடிஷ் ஆக ஆம்பளைட்டை ஆர்டர் செய்தனர். அப்போது ஆம்லெட் வந்தபோது அந்த ஆம்லெட்டை யார் முதலில் சாப்பிடுவது என்று இருவருக்கும் இடையே தகராறு வந்ததாக தெரிகிறது.
 
 இதனை அடுத்து அந்த தகராறு ஒரு கட்டத்தில் முற்றி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதாகவும் அப்போது செல்லப்பன் என்பவர் தனது  மைத்துனரை முருகன் என்பவரை அடித்தே கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இது குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். முருகன் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்