தமிழகத்தில் அடுத்த 2 தினங்களில் வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (13:51 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது என்பதும் மீண்டும் கோடை காலம் தொடங்கிவிட்டதோ என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு வெப்பம் கொளுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்கள் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகும் என்று கூறப்படுகிறது. 
 
எனவே வெயில் நேரத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்