உயர்சாதி ஒதுக்கீடுக்கு கடும் கண்டனம் தெரிவித்த திமுக நாளேடு:

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (06:58 IST)
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இந்த இட ஒதுக்கீடு திட்டத்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட பல கட்சிகள் ஆதரித்ததால் பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேறியது. ஆனால் திமுக மட்டும் இந்த பொருளாதார ஒதுக்கீடுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து அக்கட்சியின் நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
 
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை உயர் வர்க்கத்தினர்களுக்காக, உயர் வர்க்கத்தினர்களால் உருவாக்கப்பட்டது. பாஜக அரசு இதனை அமல்படுத்தியது ஆச்சரியம் எதுவும் இல்லை. அவர்கள் அவர்களுக்காக அதைதான் செய்வார்கள். செய்யவில்லை என்றால்தான் ஆச்சரியம்
 
இதில் ஆச்சரியமானது என்னவென்றால் இட ஒதுக்கீட்டை இதுவரை எதிர்த்தவர்களெல்லாம் இட ஒதுக்கீட்டை ஆதரிக்க ஆரம்பித்தபோதுதான். ஏன் இவர்கள் ஆதரிக்கிறார்கள்? என்பது ஸ்டேட் வங்கியில் நடந்த பணியாளர்கள் தேர்வில் புரிந்து கொள்ள முடிகிறது
 
இதில் இன்னொரு மோசடி என்னவென்றால் இவர்கள் உயர்சாதி ஏழையினர் அல்ல என்பதுதான். ஆண்டுக்கு ரூபாய் 3 லட்சம் வருமானம் என்பது உச்சவரம்பு. அப்படியானால் மாதத்துக்கு ரூபாய் 60 ஆயிரம் சம்பளம் வாங்குபவர்கள், மோடியின் கார்ப்பரேட் ராஜ்யத்தில் ரூபாய் 60,000 மாத சம்பளம் வாங்குபவர்கள் ஏழைகளா? 
 
எனவே இதை உயர் சாதி ஏழைகளுக்கான ஒதுக்கீடு அல்ல உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு. அதாவது உயர் சாதி ஏழைகளுக்கும் பச்சை துரோகம் செய்வதாகும். ஏழைகளுக்கு தருவது போல ஏமாற்றி மீண்டும் பணக்காரர்களுக்கு தருவதே பாரதிய ஜனதா கட்சியின் அரசியல். பாஜகவின் அரசியல் ஒரு பணக்கார அரசியல் தானே! என்று அந்த நாளிதழின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்