அமைச்சர் பதவிக்காக காத்திருக்கும் 65 பேர்: ஆட்சி அமைக்க தயக்கம் காட்டும் பாஜக

வியாழன், 25 ஜூலை 2019 (19:26 IST)
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் 65 பேர் அமைச்சர் பதவி கேட்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் ஆட்சி அமைக்க பாஜக காட்டுவதாக கூறப்படுகிறது 
 
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் குமாரசாமி தலைமையில் ஆட்சி கவிழ்ந்தது. ஆட்சி கவிழ்ந்து இரண்டு நாட்கள் ஆகிய பின்னரும் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோராமல் உள்ளது. இதற்கு பின்னணி காரணமாக பாஜக தனது மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 15 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை இன்னும் சபாநாயகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பாஜக தனது மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும். எனவே சபாநாயகர் முடிவு தெரியும் வரை ஆட்சி அமைக்க உரிமை கோர காத்திருக்கலாம் என்பது பாஜகவின் யோசனையாக உள்ளது. ஒருவேளை சபாநாயகர் முடிவு எடுக்க தாமதம் ஆனால் சுப்ரீம் கோர்ட்டை அணுகவும் பாஜக திட்டமிட்டுள்ளது 
 
மேலும் பாஜகவில் உள்ள 50 எம்எல்ஏக்களும், ராஜினாமா செய்த 15 எம்எல்ஏக்களும் அமைச்சர் பதவி கேட்பதால் மொத்தம் 65 பேர் அமைச்சர் பதவிக்காக காத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சரையும் சேர்த்து மொத்தம் 34 பேர் மட்டுமே அமைச்சர் ஆக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஆட்சி அமைத்து முதலமைச்சராக எடியூரப்பா பதவி ஏற்றால், 6 பேர் துணை முதல்வர் முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதனால் அம்மாநிலத்தில் பெரும் இடியாப்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்