கஜா புயல் எதிரொலி: பள்ளி, கல்லூரி விடுமுறை குறித்த தகவல்

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (07:40 IST)
வங்கக்கடலில் ஏற்பட்ட கஜா புயலின் கண்பகுதி இன்று அதிகாலை தமிழக நிலப்பரப்பை கடந்தது. இருப்பினும் இன்னும் முழுமையாக புயல் கரையை கடக்கவில்லை. எனவே தற்போது நாகை, தஞ்சை, திருவாரூர் உள்பட ஒருசில மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில் இன்றும் ஒருசில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், ராமநாதபுரம், நாகை, கடலூர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், திருச்சி, மதுரை மற்றும் கரூர் ஆகிய மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ஈரோடு, கோவை, சேலம்,  விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்