கரையை கடந்தது கஜா புயலின் கண் பகுதி: சேத விவரங்கள் என்ன?

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (07:25 IST)
தமிழகத்தை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று அதிகாலை ஒருவழியாக கரையை கடந்தது. கஜா புயலின் கண் பகுதி முழுமையாக கரையைக் கடந்தது என வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

கஜா புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த புயலால் அடித்த பலத்த காற்றின் காரணமாக கடலூர் குறிஞ்சிப்பாடியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில், மின்வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி ஆனந்தன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் கோடியக்கரை, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார், செருதூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுந்தது. புயல் காற்றில் 200க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. நாகையில் சாலையில் விழுந்துள்ள மரங்கள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றப்படுகின்றன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்