வெள்ளை அறிக்கை கேட்டேன் வெளிநாடுகளுக்கு போய் விட்டார்கள் – மு.க.ஸ்டாலின் பேச்சு

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (14:01 IST)
தமிழகத்தில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த வெள்ளை அறிக்கை கேட்டதற்கு அமைச்சர்கள் வெளிநாடு போய்விட்டார்கள் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

அண்ணா அறிவாலய மேலாளர் மகனின் திருமணம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய ஸ்டாலின் தொண்டர்களிடையே பேசியுள்ளார்.

அப்போது அவர் நாட்டின் பொருளாதார நிலை அதள பாதாளத்துக்கு சென்று கொண்டிருப்பதாகவும், அதை மறைக்கவே மத்திய அரசு காஷ்மீர் விவகாரம் போன்றவற்றை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் நடத்தப்பட்ட முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட கேட்டதாகவும், அதை இதுவரை வெளியிடாமல் அமைச்சர்கள் வெளிநாடு பயணங்களில் மூழ்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தற்போது அமெரிக்கா சென்றிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு சில அமைச்சர்கள் சென்றிருக்கின்றனர். திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்தோனேஷியா, தாய்லாந்து நாடுகளுக்கு வனத்துறை சார்பான பணிகளுக்காக சென்றிருக்கின்றனர். அதனால் தற்போது பெரும்பானமையான அமைச்சர்கள் தமிழ்நாட்டில் இல்லை. இதை சிலேடையாக குறிப்பிட்ட ஸ்டாலின் “தமிழக அமைச்சரவை தற்போது சுற்றுலா அமைச்சரவையாக மாறிவிட்டது” என்று கிண்டலடித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்