இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (13:56 IST)
கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகளின் பங்களிப்பில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கொரோனா நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து வீடியோ மூலம் மக்களுக்கு பேசியுள்ள மு.க.ஸ்டாலின் 9 அம்ச கோரிக்கையை தமிழக அரசுக்கு விடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும்.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உதவி தொகையாக ரூ.1 கோடி வழங்க வேண்டும்.

சுகாதார பணிகளில் ஈடுப்பட்டுள்ள பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் ஆகியவை அந்த கோரிக்கைகளில் பிரதானமானதாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்