பறிமுதலான வாகனங்களை வாங்கிக்கலாம் வாங்க! – புதிய அறிவிப்பு!

வியாழன், 16 ஏப்ரல் 2020 (13:32 IST)
மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விதிகளை மீறியதாக இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை திரும்ப பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் வரிசைப்படி வாகன உரிமையாளர்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழங்கப்படும்.

வாகனங்களை பெற வரும் உரிமையாளர்கள் ஓட்டுனர் உரிமம், ஆர்.சி.புக் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும்.

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள் ஒப்படைக்கப்படும்.

தகவல் அனுப்பப்பட்ட வாகன உரிமையாளர்கள் மட்டும் அறிவிக்கப்பட்ட தேதிகளில் வந்து வாகனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்