ஊரடங்கை நீட்டிக்க ஏன் தயக்கம்? எடப்பாடியாரை வறுத்து எடுத்த ஸ்டாலின்!!

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (14:24 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக சாடி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அரசு இன்னும் ஊரடங்கு குறித்து முடிவெடுக்கவில்லை. இதனை சுட்டிக்காட்டி திமுக தலைவர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார். 
 
இதற்கு எடப்பாடி பழனிச்சாமி, அரசின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுவதாகவும், அவரது சந்தர்ப்பவாத அரசியலை அவர் காட்டுவதாகவும் சாடியிருந்தார். 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். நீண்ட அறிக்கையாக வெளியாகி இருக்கும் இந்த பதிலடியின் முக்கியமானவை சில பின்வருமாறு... 
 
நான் கேட்கவேண்டிய சந்தர்ப்பத்தில் தான் கேட்கிறேன், எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் தட்டிக்கேட்டால் சந்தர்ப்பவாதம் என்பதா?சந்தர்ப்பவாதம் பற்றி முதல்வர் பேசலாமா? கொரோனா பேரிடரில் இருந்து மக்களை மீட்க கடமை உணர்வுடன் முதல்வர் செயல்பட வேண்டும். 
 
அரசாங்கம் ஒழுங்காக முறையாக மக்களுக்கு செயல்படாவிடில் அரசாங்கத்தை திமுக செயல்பட வைக்கும். கொரோனாவை முழுமையாக ஒழித்துவிட்டாரா முதல்வர்? பின்னர் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க ஏன் தயக்கம்?
 
ஊரடங்கை பற்றி முடிவெடுத்தால் மத்திய அரசு என்ன நினைக்குமோ என உள்ளூர் பயம் தான் காரணம். அரசியலை கைவிட்டு நெருக்கடிகள் மிகுந்த இந்த நேரத்தில் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து சென்று மனித குலமே நடுங்கி நிற்கும் இப்பேரிடரில் இருந்து தமிழக மக்களை மீட்க முதல்வர் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்