கொரோனா வேடமிட்டு காவலர்கள் விழிப்புணர்வு பேரணி!!

ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (12:23 IST)
சென்னையில் கொரோனா போன்ற ஹெல்மெட்டுகள் அணிந்து காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணி. 
 
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டொர் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 14 வரை இருக்கும் ஊரடங்கு அதன் பின்னர் நீட்டிக்கப்படுமா என்பதை பிரதமர் அறிவிப்பிற்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என தமிழக முதலவ்ர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  
 
இந்நிலையில், ஊரடங்கையும் மீறி மக்கள் வெளியே சுற்றி திரிவதால் சென்னையில் கொரோனா போன்ற ஹெல்மெட்டுகள் அணிந்து காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். சைதாப்பேட்டை தாதண்டர் நகரில் இருந்து சிஐடி நகர் வரை தனிநபர் இடைவெளியை வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு பேரணி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்