மிசாவோ, பஞ்சமியோ வெச்சிட்டா வஞ்சகம் பண்ரார் ... ஸ்டாலினை வம்பிழுத்த பாஜக .. ’டென்சன் ’ஆன திமுக தொண்டர்கள்!

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (16:49 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலின் மிசா கைதியா? இல்லையா? மிசாவில் கைது செய்யப்பட்டவரா? அல்லது மிசா காலத்தில் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டாரா? என்ற விவகாரம் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு தனியார் தொலைக்காட்சி ஆரம்பித்து வைத்த இந்தப் பிரச்னை தற்போது அதிமுக அமைச்சர் வரை சென்றுவிட்டது. இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் ட்ரெண்ட் ஏற்படுத்தி வருகிறது
 
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய திமுக ஐடிவிங் மற்றும் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அமைதியாக உள்ளனர். ஸ்டாலின் மிசா கைதிதான் என ஆதாரத்துடன் திமுக தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் வராததால் ஸ்டாலின் மிசா கைதி இல்லையோ? என்ற சந்தேகம் பலரது மனதில் உள்ளது.
 
இந்நிலையில், இன்று, தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர்  பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது. 
 
அதில்,எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை 
வீயாது பின்சென் றடும் 
 
ஆதாரம் எங்கேன்னு விடாமல் கேட்டால் 
 
 என்ன தான் பண்ணுவார் பாவம்..
 
மிசாவோ, பஞ்சமியோ வெச்சிட்டா வஞ்சகம் பண்றார்  @mkstalin எனப் பதிவிட்டுள்ளனர்
.
இந்நிலையில், துக்ளக் பத்திரிகை ஆசிரியரரும் பாஜக ஆதரவாளருமான  குருமூர்த்தி, ஸ்டாலின் மிசா கைதிதான் என அடித்து கூறியுள்ளார்.
 
 இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
"ஸ்டாலின் மிசா கைதியாக சிறையில் இருந்தது உண்மைதான். அது எனக்கே தெரியும். அவசர காலம் முடிந்து நடந்த 1977 தேர்தலில், அவருடன் இணைந்து முரசொலி மாறனுக்கு நான் பிரச்சாரம் கூட செய்திருக்கிறேன்’ என்று தெரித்துள்ளார்.
 
பாஜகவிலேயே  முரண்பாடு உள்ளதாகவும், அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஸ்டாலினுக்கு எதிரான கருத்துகளை வதந்திகளை பரப்பி  வருவதாகவும்  திமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்