தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற தொடங்கியுள்ளன. அரசியல் கட்சிகள் விருப்ப மனு பெறுவதிலும், ஆட்களை தேர்ந்தெடுப்பதிலும் பிஸியாக உள்ளன. உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ”திமுக தேர்தல் காய்ச்சலில் உள்ளது” என்று பேசியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெறுவது குறித்து பயந்து போயுள்ளதாக அவர் மறைமுகமாக கூறுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி ஜோதிமணி ” அமைச்சர் ஜெயக்குமார் அவர்களே தேர்தல் காய்ச்சல் அதிமுகவுக்குத் தான். 4ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த பயந்துகொண்டு, அதனால் தமிழக மக்களுக்கு வரவேண்டிய 11,000 கோடி ரூபாய் வராமல் முடங்கிக் கிடக்க அதிமுக அரசின் தேர்தல் காய்ச்சல் தான் காரணம்!” என்று பதிவிட்டுள்ளார்.