சும்மா இருந்த உதயநிதி சிக்கலில்... கோத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் பாஜக!!

சனி, 16 நவம்பர் 2019 (15:36 IST)
தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
சமீபத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின், பஞ்சமி நிலம் குறித்து அசுரன் திரைப்படம் பேசியுள்ளது. இந்த திரைப்பட குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். இதை தொடர்ந்து அவரது கருத்துக்கு எதிர் கருத்தாக பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி கட்டிடமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதுதான் என கூறினார்.
 
அதற்கு பதிலளிக்கும் விதமாக முக ஸ்டாலின், முரசொலி பத்திரத்தின் பட்டாவை பதிவிட்டு, முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலம் அல்ல என கூறினார். இதையடுத்து, ராமதாஸ் முரசொலி கட்டிடத்தின் மூலப்பத்திரத்தை காட்டுமாறு ஸ்டாலினை குறிப்பிட்டு கூறினார். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், நான் மூலப்பத்திரத்தை காண்பிக்கிறேன், ஒரு வேளை முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலமாக இருந்தால் நான் அரசியலை விட்டு விலகிக்கொள்கிறேன், ஆனால் பஞ்சமி நிலமாக இல்லை என்றால், ராமதாஸும் அவரது மகனும் அரசியலை விட்டு விலகிவிடவேண்டும் என கூறினார். 
இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முரசொலி அலுவலக கட்டிடம் உள்ள இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளார். இதனிடையே டெல்லியில் உள்ள தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தில் தமிழக பாஜக செயலாளர் ஆர் ஸ்ரீனிவாசன் இது குறித்து புகார் அளித்த்திருந்தார்.  
 
இந்நிலையில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் உதயநிதி ஸ்டாலினிடம் பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் வரும் 19 விசாரணை நடத்துவார் எனவும் தகவ்ல் வெளியாகியுள்ளது. 
 
உதயநிதி ஸ்டாலின் முரசொலி பஞ்சமி நிலம் என்னும் விவகாரத்தில் பெரிதாக எந்த கருத்தையும் தெரிவிக்காவிட்டாலும், அவர்தன் இப்போது முரசொலியை கவனித்து வருவதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்