அமைச்சர் செந்தில் பாலாஜி கைது: பட்டாசு வெடித்து கொண்டாட முயன்ற கரூர் பொதுமக்கள்..!

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (12:36 IST)
அமைச்சர் செந்தில் செந்தில் கைது நடவடிக்கையை ஒரு பக்கம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டித்து வரும் நிலையில் கரூரை சேர்ந்த சிலர் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை பாராட்டி பட்டாசு வெடித்து கொண்டாட முயன்றதாகவும் இதனை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று அமலகத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் திடீரென நள்ளிரவில் அவர் கைது செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து உடல் நல கோளாறு காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கருரில் ஒரு சிலர் கைது நடவடிக்கையை பாராட்டி பட்டாசு வெடிக்க முயன்றதாகவும் இதனை அடுத்து போலீசார் அங்கு வந்து அதனை தடுத்தது பட்டாசு வெடிக்க முயன்றவர்களை கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்