அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்படுகிறதா?

புதன், 14 ஜூன் 2023 (12:17 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிற தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. 
 
நேற்று நள்ளிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை அடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து தீவிரமாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும் இது ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்த மேலும் தகவல்களை விரைவில் ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்