அவசர அவசரமாக சென்னை வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி.. பரபரப்பு தகவல்..!

புதன், 14 ஜூன் 2023 (12:13 IST)
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விபரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவில் அவரது மனைவி மேகலா அவர்களிடம் கூறியதாகவும் இதனை அடுத்து செந்தில் பாலாஜி மனைவி இன்று காலை கரூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் செந்தில் பாலாஜியின் சகோதரரும் வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சென்னை வந்தவுடன் செந்தில் பாலாஜியை அவரது மனைவி சந்தித்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி மனைவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார் என்று கூறப்படும் நிலையில் அது எந்த விதமான மனுவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்