2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: செந்தில் பாலாஜியை பார்த்த பின் முதல்வரின் பதிவு..!

புதன், 14 ஜூன் 2023 (11:14 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த பின்னர் தனது சமூக வலைதளத்தில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அரசுக்கு மக்கள் தக்க பாடம் போட்டுவார்கள் என்று பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது
 
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?
 
வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா?
 
பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 
 
2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்