பேருந்து கட்டணம் உயர்த்தவே இல்லை.. அது வதந்தி..! – அமைச்சர் விளக்கம்!

Webdunia
திங்கள், 16 மே 2022 (15:56 IST)
தமிழ்நாட்டில் அரசில் பேருந்தில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்தின் நகர பேருந்துகளில் பயணிக்க மகளிருக்கு இலவசம் என சில மாதங்களுக்கு முன்பாக தமிழக அரசு அறிவித்தது. பின்னர் தற்போது பல்வேறு பொருட்களின் விலையும் உயர்ந்து வரும் நிலையில் அரசு பேருந்துகளுக்கான கட்டணமும் உயர உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

எந்தெந்த வகை பேருந்துகளுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற பட்டியலை போக்குவரத்து கழகம் தயாரித்திருப்பதாக வெளியான தகவல் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் “அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்து எந்தவிதமான அட்டவணையும் தயாரிக்கப்படவில்லை. தவறான தகவல் பரப்பப்படுகிறது” என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்