இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து பல பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. இந்நிலையில் பின்னலாடைகளுக்கான நூலின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பின்னலாடை நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.
பின்னலாடைக்கான நூலின் விலையை குறைக்க கோரி பின்னலாடை நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் நூல் விலையை குறைக்க வலியுறுத்தி இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.
இதனால் திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் ரூ.300 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.