அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உதவியாளருக்கு கொரோனா? அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (16:05 IST)
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
தமிழகத்தில் ஏற்கனவே  திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவுக்கு பலியானார். மேலும் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திமுகவின் விபி கலைராஜனுக்கும் கொரனோ ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் என்பவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
அமைச்சரின் உதவியாளர் ரவிச்சந்திரனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து கடந்த ஞாயிறு அன்று அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவருடைய கொரோனா பரிசோதனை ரிசல்ட் வந்துள்ள நிலையில் அவருக்கு பாசிட்டிவ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்