உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,091 லிருந்து 3,54,065 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,80,013லிருந்து 1,86,935 ஆக உயர்வு என்பதே ஆறுதல் அளிக்கும் தகவலாக உள்ளது.
அதே சமயம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,900 லிருந்து 11,903ஆக அதிகரிப்பு. மேலும், கொரோனாவால் பாதித்த 1,55,178 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,974 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் 2,003 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பாதித்து வெண்டிலேட்டரில் இருப்பவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக டெக்ஸாமெதசோன் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆம், வெண்ட்டிலேட்டர்களில் ஆக்சிஜன் சப்போர்ட் கிடைக்க வேண்டிய இம்மருந்து அளிக்கப்படும் போது இது உயிர் காக்கும் மருந்தாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், லேசான கொரோனா தொற்று ஏற்பட்டு பெரிதாக பாதிப்பு இல்லாதவர்களுக்கு இந்த மருந்தால் எந்த பயனும் இல்லை. ஆனால், இந்தியாவில் பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் டெக்ஸாமெதசோன்-ஐ தயாரிப்பதால் ரூ.10-க்கு இந்த மருந்து கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.