ரஷ்யா நெருங்கிவிட்டது இந்தியா: உலக கொரோனா பாதிப்பு 82 லட்சத்தை தாண்டியதால் பரபரப்பு

புதன், 17 ஜூன் 2020 (06:58 IST)
உலக கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ள நிலையில் ரஷ்யாவை 4ஆம் இடத்தில் உள்ள இந்தியா நெருங்கி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,135 பேர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,54,161 பேர்கள் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளதால் 4வது இடத்தில் உள்ள இந்தியா, இன்னும் ஒருசில நாட்களில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளிவிட்டு 3வது இடத்திற்கு முன்னேறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 25,439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22,08,400 என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் 119,132 பேர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதேபோல் பிரேசில் நாட்டின் மொத்த பாதிப்பு 928,834 என்றும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,456 என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா, பிரேசிலை அடுத்து மூன்றாவது இடத்தில் ரஷ்யாவில் 545,458 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7,284 கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் 354,161 பேர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 11,921 பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தகக்து. இந்தியாவுக்கு ரஷ்யாவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் இரண்டு லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் உலக அளவில் 82,56,659 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 119,132 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்