அகமதாபாத் விமான விபத்து! விசாரணை அறிக்கையில் கேள்விகள்..? - ஏர் இந்தியா

Prasanth K

செவ்வாய், 15 ஜூலை 2025 (09:21 IST)

அகமதாபாத் விமான விபத்து குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், இந்த அறிக்கை சில தெளிவுகளையும், பல சந்தேகங்களையும் எழுப்புவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ள ஏர் இந்தியா தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சன் “மொத்த உலகமும், நாமும் எதிர்பார்த்தது போல விமான விபத்து குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கை கூடுதலான தகவல்களை கொண்டு வந்துள்ளது. அதேசமயம் எதிர்பார்த்தது போல இது அதிக தெளிவையும், நிறைய கேள்விகள், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. விபத்திற்குள்ளான விமானம் மற்றும் அதன் எஞ்சின்களில் எந்த விதமான கோளாறோ, பராமரிப்பு குறைபாடுகளோ இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

 

எரிப்பொருள் தரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. பயணிகளிடமும் எந்த அசாதரண சூழலும் காணப்படவில்லை. விமானிகள் பயணத்திற்கு முந்தைய போதை பரிசோதனை உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் நல்ல உடல் நிலையுடன் இருந்துள்ளனர். 

 

கடந்த 30 நாட்களுக்கும் மேலாக விமான விபத்து குறித்த ஏராளமான புதிய கருத்தாக்கங்கள், குற்றச்சாட்டுகள், புரளிகள் பரவி வந்த நிலையில் தற்போது அவை ஆதாரமற்றதாக போயுள்ளது. அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வருவது புத்திசாலித்தனமான செயல் அல்ல. ஏர் இந்தியா தனது பணியில் கவனம் செலுத்தி வாடிக்கையாளர்களுக்கு நேர்மையான சிறப்பு வாய்ந்த சேவைகளை வழங்குவதிலும், புதுமை மற்றும் டீம் வொர்க்கிலும் கூடுதல் கவனம் செலுத்தும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்