தமிழக தேர்வு முகமையால் நடத்தப்படும் அரசு பணி தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் சேர்க்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை திமுக அளித்தபோது தமிழக அரசு பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தேர்வு முகமையால் நடத்தப்படும் அரசு பணி தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் தகுதி தேர்வாக கட்டாயமாக்கப்படும் எனவும், அரசு பணிகளில் இதுவரை பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்த நிலையில் அதை 40% ஆக உயர்த்துவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ் தகுதித்தேர்வாக சேர்க்கப்படுவதால் தமிழக இளைஞர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு இதன் மூலம் உறுதிப்படுவதாக கூறப்படுகிறது.