தமிழகத்தில் புதிதாக 31 அரசு கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது புதிய கல்லூரிகள் தொடங்குவது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் 31 புதிய கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் குறிப்பாக எந்த பகுதியில் கல்லூரிகள் இல்லை என்பதை ஆய்வு செய்து அந்த பகுதியில் முதல் கட்டமாக கல்லூரி தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோல் 4,000 பேர் பேராசிரியர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்
கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதை அடுத்து 31 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.