விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இன்று மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, ராஜஸ்தான், பீகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் விமான எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் விமான போக்குவரத்து துறை வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்