சூர்யாவுக்கு வாழ்த்து கூறிய அதிமுக அமைச்சர்!

Webdunia
செவ்வாய், 23 ஜூலை 2019 (18:47 IST)
சூர்யா சமீபத்தில் கூறிய புதிய கல்விக்கொள்கை குறித்த கருத்துக்கு ஒருசில அரசியல் தலைவர்கள் குறிப்பாக அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ கடும் விமர்சனம் செய்தார். சூர்யாவை அவர் 'அரைவேக்காடு மனிதர்' என விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் சூர்யா தனது 44வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
வரும் ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும் என்றும், உங்களுக்கு கடவுளின் ஆசி கிடைக்கும் என்றும், இந்த பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்து கொள்வதாக அவர் தனது டுவீட்டில் கூறியுள்ளார்.
 
தமிழக அரசின் நிர்வாகம் மற்றும் கல்விக்கொள்கை குறித்து சூர்யா கடுமையாக விமர்சித்த நிலையில் ஒட்டுமொத்த அதிமுக தலைவர்களும் சூர்யாவின் மீது கடும் கோபத்தில் இருக்கும் நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மட்டும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்