என்ன சரோஜா பசி மயக்கமா? மேடையில் ஜெயகுமார் கலகலப்பு!!

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (16:23 IST)
அமைச்சர் ஜெயகுமார், பொது மேடையில் பெண் அமைச்சர் ஒருவரை கிண்டலடித்துள்ளது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
 
கோடம்பாக்கத்தில் புதுமணப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயகுமாரும், பெண் அமைச்சர் சரோஜாவும் கலந்துக்கொண்டனர். 
 
நிகழ்ச்சியில் முதலில் பேச துவங்கிய அமைச்சர் சரோஜா, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் ஜெயராமன் அவர்களே!! என்று கூற பின்னர் தனது தவறை உணர்ந்து அமைச்சர் ஜெயகுமார் அவர்களே என பேசினார். 
 
அப்போது மேடையில் இருந்த ஜெயகுமார், பசி மயக்கமா என கேள்வி எழுப்ப இதைக் கேட்டு அரங்கில் அமர்ந்திருந்த மக்கள் சில நொடிகள் சிரிப்பலையில் மூழ்கினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்