தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் புதிதாக பிரிக்கப்பட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று வரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மற்றும் மாவட்ட கவுனிலர் தேர்தலில் அதிமுகவை விட திமுக அதிக இடங்களை கைப்பற்றி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் திமுக மற்றும் அதிமுகவின் வெற்றி விகிதம் குறித்து அமைச்சர் ஜெயகுமார் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நாடாளுமன்றத்தில் பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிமுக இப்போது அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால், திமுக சரிந்துள்ளது.
அரசியல் என்பது பரமபதத்தைப் போல். திமுகவின் செயல்பாடுகளை மக்கள் உணர்ந்து கொண்டதால், அவர்களை இறக்கி விடுகிறார்கள். அதிமுக 35 மதிப்பெண் எடுத்த இடத்தில் 75 மதிப்பெண் எடுத்துள்ளது. எங்களுக்கு இது மகத்தான வெற்றி. இதைப் பார்க்கும்போது 2021 தேர்தலில் மாபெரும் வெற்றிப் பெறுவோம் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.