சோபியா செய்தது நாகரிகமற்ற செயல் - தமிழிசைக்கு முட்டுக் கொடுக்கும் அமைச்சர் ஜெயக்குமார்

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (12:46 IST)
பொது இடத்தில் ஒரு நபரையோ கட்சியையோ விமர்சிப்பது நாகரிகமற்ற செயல் என தமிழிசைக்கு முட்டுக் கொடுக்கும் விதத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் விமானத்தில் சென்றபோது 'பாசிச பாஜக ஒழிக' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மாணவி ஷோபியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
சோபியா கைது செய்யப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். சற்று நேரத்திற்கு முன்பு சோபியா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஒரு அரசியல் கட்சிப் பிரமுகரையோ அல்லது அரசியல் கட்சியயோ பொது இடத்தில் விமர்சிப்பது நாகரிகமற்ற செயல் என்றும் அவ்வாறு செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும் விளம்பரம் தேடவே இவ்வாறு பலர் பேசி வருகின்றனர் என ஜெயக்குமார் காட்டமாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்