சகோதரி என கூறி சோபியாவுக்கு ஆதரவு கொடுத்த தினகரன்

செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (11:02 IST)
தமிழிசை முன் பாசிச பாஜக ஒழிக என கோஷமிட்ட ஷோபியா என்ற ஆராய்ச்சி மாணவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் தற்போது தமிழகத்தில் பூதாகரமாகியுள்ள நிலையில் சோபியாவுக்கு ஆதரவாக பல அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன.

ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சோபியாவுக்கு ஆதரவாக தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ள நிலையில் சற்றுமுன் டிடிவி தினகரன் சோபியாவுக்கு ஆதரவாகவும், பாஜகவை கண்டித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 'சகோதரி சோபியா கைது: தமிழிசையின் பெருந்தன்மையற்ற செயல்' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள தினகரன், ஒரு விமானத்தில் பயணி பிரச்சனை செய்தால் அதுகுறித்து புகார் தெரிவிக்க வேண்டியது விமான ஊழியர்கள்தான் என்றும், அவர்களே அமைதியாக இருந்தபோது தமிழிசை பெருந்தன்மையாக நடந்து கொண்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் 'பாசிச பாஜக ஒழிக' என ஒரு பெண் இத்தனை தைரியமாக கோஷமிட்டுள்ளார் என்றால் இளைஞர்கள் மத்தியில் பாஜக அந்த அளவுக்கு அவநம்பிக்கையை சம்பாதித்துள்ளதாகவும், இனியாவது தங்களை பாஜக திருத்தி கொள்ள வேண்டும் என்றும் தினகரன் கூறியுள்ளார். தினகரனின் முழு அறிக்கை இதோ:

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்