திமுக தலைவர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கஜா புயலானது இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. தமிழக அரசின் போதிய முன்னேற்பாடு நடவடிக்கையால் பல அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது.
அதேபோல் பல இடங்களில் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலையில் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகிறது. மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை என பல துறைகள் ஒன்றினைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசின் இந்த துரித நடவடிக்கையை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து கஜா புயல் பாதிப்புகளை சீர் செய்து வருகிறது. அரசின் துரித நடவடிக்கைகயால் பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது.
எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் அரசின் துரித நடவடிக்கையை பாராட்டியுள்ளார். கட்சி பேதம் பார்க்காமல் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் எங்களை பாராட்டியது ஆரோக்கியமான ஒன்று என அமைச்சர் கூறியுள்ளார்.