அதேபோல் பல இடங்களில் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலையில் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகிறது. மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை என பல துறைகள் ஒன்றினைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அம்மா அரசின் துரித நடவடிக்கையாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த சமயோஜித முன்னேற்பாடு நடவடிக்கையாலும் பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான முறையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேகமாக வந்த கஜா புயலானது தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகளை பார்த்து கூஜா புயல் போல ஆகிவிட்டது என அவர் கூறியிருக்கிறார்.