மெட்ரோ பயண அட்டை கால அவகாசம் நீட்டிப்பு.!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (11:46 IST)
ஊரடங்குக்குப் பின்னர் சென்னையில் மெட்ரோ ரயில் ஓட தொடங்கியுள்ள நிலையில் பயண அட்டை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜூன் 28ஆம் தேதி வரையிலான ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்று சென்னையில் மெட்ரோ ரயில் ஓட தொடங்கியது. சென்னையில் 40 நாட்களுக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளதை அடுத்து பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் பயணம் செய்து வருகின்றனர்,

இந்நிலையில் கொரோனா ஊரடங்குக்கு முன்னர் வாங்கிய பயண அட்டைகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதுபற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தை அனுக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்