கேரள கர்நாடகா எல்லை மாவட்டங்களில் சர்ச்சை… கிராமங்களின் பெயர் மாற்ற எதிரொலி!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (11:40 IST)
கேரள மற்றும் கர்நாடகா மாநில எல்லையில் உள்ள சில கிராமப் பகுதிகளின் பெயரை மலையாளத்தில் மாற்றப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.

கேரள மற்றும் கர்நாடகா மாநிலங்களில் எல்லையில் உள்ள மாவட்டம் காசர்கோடு. இந்த மாவட்டத்தில் அதிக அளவில் கன்னட மக்கள் வசிப்பதால் அங்கு சில கிராமங்களின் பெயரே கன்னடத்தில் இருந்துள்ளது. ஆனால் இப்போது அந்த பெயர்களை மலையாளத்தில் கேரள அரசு மாற்றியுள்ளது. மல்லா என்ற கிராமத்தின் பெயரை மல்லம் என்றும், மதுரு என்ற கிராமத்தின் பெயரை மதுரம் என்றும் மாற்றியது கன்னட மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்மந்தமாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்