நாளை முதல் புறநகர் ரயில் இயக்கம் - ஆண்களுக்கு மட்டும் கட்டுப்பாடு!

வியாழன், 24 ஜூன் 2021 (13:31 IST)
நாளை முதல் புறநகர் ரயிலில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுள்ளது.  
 
சென்னையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் புறநகர் ரயிலில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுள்ளது.  
 
பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைத்து நேரத்திலும் பயணிக்கலாம். மேலும் ஆண்கள் புறநகர் ரயிலில் காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் கடைசி ரயில் இயக்கப்படும் வரையிலும் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்